Pradeep Kumar feat. Shreya Ghoshal - Mailaanji Songtexte

Songtexte Mailaanji - Shreya Ghoshal , Pradeep Kumar




மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
கண்ணாடி போல காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்
கண்ணால நீயும் நூல விட்டு பாக்க
காத்தாடியாக நானும் சுத்துறேன்
சதா சதா சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமா நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி
கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே
தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே
விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ
கணக்கில்லாம வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ
அழகா நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன நான் தாலாட்டவேனே மனகூட்டுல
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பல்லாக்கு போல நீயும் என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்
வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
சதா சதா சந்தோஷமாகுறேன்
மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
நூறாகுறேன்
பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமா நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேப்பேனே உன்ன ஆஞ்சி



Autor(en): Yugabharathi


Pradeep Kumar feat. Shreya Ghoshal - Namma Veettu Pillai (Original Motion Picture Soundtrack)
Album Namma Veettu Pillai (Original Motion Picture Soundtrack)
Veröffentlichungsdatum
06-09-2019



Attention! Feel free to leave feedback.