Benny Dayal - Poongatre Poongatre Lyrics

Lyrics Poongatre Poongatre - Benny Dayal

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் தேசம்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சி பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை கூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி உன் கண்ணை
பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னில்
ஒரு வார்த்தை பேசாமல் தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிபோக்கன் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
அழகான நதி பார்த்தால்
அதன் பெயரினை கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்ன பேரோ
நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி
போகின்றேன் போகின்றேன் நில்லென்று சொல்கின்ற
நெடுங்சாலை விளக்காக அலைகின்றேன் எரிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய் போகும் தூரம் குறைகிறதே
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் தேசம்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

Writer(s): N Muthu Kumar

Attention! Feel free to leave feedback.