Deva feat. Hariharan & Harini - Deva Deva Devathaiye Lyrics

Lyrics Deva Deva Devathaiye - Hariharan , Deva , Harini



ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை தேவை வா மதியே
என் காதலி யார் என்று
நான் காற்றில் அலைந்தேனே
ஒரு தேவதை உன் பெயரை
வந்து தெரிவித்து போனாலே
நீ போடும் தாவணியே
என் கட்சி கொடி
நான் உன்னை ஆட்சிசெய்வேன்
உன் இஷ்டப்படி
ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை தேவை வா மதியே
ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால்
அது மண்ணை தானே சேரும்
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்
அது பெண்ணை தானே சேரும்
ஒரு வார்த்தை பருவமானால்
அது கவிதை ஆக மாறும்
பெண் கனவு பருவமானால்
அது காதலாக மாறும்
பூக்கள் யாசித்தால்
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்
கண்கள் யோசித்தால்
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்
மாலை வந்தால் குளிருது
என்னை மார்பில் புதைத்து விடு
புலம்பும் வளையல் உடைத்துவிடு
ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே
நம் காதல் ஏட்டில் எழுது
முதல் முத்த அத்தியாயம்
இன்று விடியும் முன்பு எழுது
நீ மொத்த அத்தியாயம்
இன்று எந்தன் மார்பு
நிறம் சிவந்ததென்ன மாயம்
உன் புனிதமான விரலால் இது
பூக்கள் செய்த காயம்
காதல் யுத்தத்தில்
அங்கும் இங்கும் சேதம் வரும்
சேதம் வந்தால் தான்
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்
உயிரில் வந்து கலந்தவள்
நீதான் உயிருக்குள் பிரிவேது
நமது உறவுகள் உடையாது
ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே
என் காதலன் யார் என்று
நான் காற்றில் அலைந்தேனே
ஒரு தேவதை உன் பெயரை வந்து
தெரிவித்து போனாலே
நான் போடும் தாவணியே
உன் கட்சி கொடி
நான் உன்னை சுவாசிப்பேன்
என் இஷ்டப்படி
ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை தேவை வா மதியே
ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே



Writer(s): Vairamuthu, Deva, Kalaikumar, K.subash


Deva feat. Hariharan & Harini - Uyirile Kalanthathu (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.