Santhosh Narayanan feat. Dopeadelicz & Muthamil - Theruvilakku Lyrics

Lyrics Theruvilakku - Santhosh Narayanan , Dopeadelicz




தெரு விளக்கு வெளிச்சத்துல
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
தெரு விளக்கு வெளிச்சத்துல
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
வெல்கம் டு மை ஹூட்
இது தானே நம்ம இடம்
அழுக்கு சாக்கடை இருந்தாலும்
எங்க மனம் சுத்த மனம்
கண்ணு போடாதே நம்ம இடம்
சிட்டில நடுவுல ஜாதி
மதம் எல்லாம் தாண்டி
ஒன்னா வாழுவோமே தெருவுல
கொண்டாட்டம் நிக்காது இங்க
ஹிப் ஹாப் கலாச்சாரம் இங்கே
உன்னால் முடியும் தோழா
பலத்தோட வாடா மேலே
மேலே செவுருக்குள்ளே
பாரு பல ஓவியம் தான்
உன்னை காட்டும் நீ
பாக்குறியே நம்ம
இடத்துல பல மாற்றம்
வீட்டுக்குள் இருந்தால்
புலம்பி புலம்பி இருந்தா மட்டும்
பத்தாது உனக்கென்ன தேவை
தோழா அதையும் நீயும் என்றும்
மறக்காதே முன்ன தான் நீயும்
வந்து உன் இடம் தான் முன்னே
வரும் ஒற்றுமையாக நின்னு
பாரு அது போல இல்ல ஒரு பலம்
என் ராகம் தனியாக
இசையோட கேட்டுக்கோ
என் பாடல் உன்னிடத்தில்
நண்பன் போனில் கேட்டுக்கோ
புரட்சியா பேசும் போது அத
நீயும் கேட்டுக்கோ நம்பிக்கை
இல்லை என்றால் இங்கே
வந்து பாத்துக்கோ
தெரு விளக்கு வெளிச்சத்துல
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
தெரு விளக்கு வெளிச்சத்துல
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
தல குனிஞ்ச காலம் போயி
நெஞ்சை நிமித்தி இப்ப வாழுறோம்ல
ஒத்துமையா இருக்குற வரைக்கும்
யாரு உதவியும் தேவை இல்ல
மாடி மேல மாடி இல்லாட்டியும்
ஒன்னா இருப்போம் தெருகோடியில
உழைப்ப நம்பி வாழுற நாங்க
சாதி பாக்குற சாதி இல்ல
சமத்துவம் பிறந்திட விடுதலை கிடைத்திட
தோழா கையிணைந்து போராடு
கனவுகள் பலித்திடும்
சரித்திரம் திருத்துவோம்
உயர்ந்து நிற்கும் இனி நம் நாடு
உணவு ஆடை வீடு போல
கல்வியும் உனது அடிப்படை தேவை
அதை நீ உணர்ந்து படித்து
பரீட்சை முடித்து ஏறு மேடை
வாங்கு கை தட்டல் பரிசு
தெரு விளக்கு வெளிச்சத்துல
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
தெரு விளக்கு வெளிச்சத்துல
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல



Writer(s): Logan, Santhosh Narayanan, Dopeadelicz



Attention! Feel free to leave feedback.