Hariharan feat. Chitra - Minnal Oru Kodi Lyrics

Lyrics Minnal Oru Kodi - Hariharan , K. S. Chithra




மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ... லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ... லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே...
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ.
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ... குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்...
என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்
ஓ... காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையே
மழையில் நனையும் பனி மலரை போல
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
ஓ.ஓ.ஓ . உலகை தழுவும் நள்ளிரவை போலே
என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே
என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்...
மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ.
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே...





Attention! Feel free to leave feedback.