Hariharan feat. Mahalakshmi - November Madham Lyrics

Lyrics November Madham - Hariharan feat. Mahalakshmi

நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்
உன் மார்பில் பாய்ந்து கண் மூடி சாய்ந்து
கண்ணாளா தன் மேனியை உன் மீசையில் தேய்ப்பாள்
கண் ஜாடை செய்தாள் கை ரெண்டும் சேர்த்தாள்
ஐயய்யோ என் ஆசையை சொல்லாமலே தீர்ப்பாள்
நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
ஹோ. தினம் விசேஷமே தினம் விசேஷமே
அவள் முத்தமிட்ட எச்சிலை முத்தத்தாலே துடைத்தால்
ரத்தத்துக்குள் சந்தோஷமே
பேரின்ப வாரம் கொண்டாடும் நேரம்
கண்ணா நாம் பாலாற்றிலே தேன் ஊற்றுவோம் வா வா
ஓ. தினம் விசேஷமே தினம் விசேஷமே
ஹோ... இதயத்தில் விட்டு கொல்வாயா அடி பெண்ணே பெண்ணே
என் உயிரை வெட்டி தின்பாயா என் கண்ணே கண்ணே
பாம்பை போல் பின்னி கொள்வாயா அடி பெண்ணே பெண்ணே
பள்ளியறை கலகம் செய்வாயா என் கண்ணே கண்ணே
என் கூந்தல் பாயில் நீ வந்து தூங்கு
கண்ணா உன் முன்கோபத்தை என் மெத்தையில் காட்டு
நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்
ஓ... இன்ப கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ
என் உச்சந்தலை முத்தத்தில் உள்ளங்காலும் தித்திக்கும்
உற்சவத்தின் தேரோட்டமா
உன் ஆடை போக நான் ஆடை ஆக
உன் அங்கம் ஒவ்வொன்றையும் நான் மூடுவேன் வா வா
ஓ... இன்ப கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ
ஊரெல்லாம் நம்மை பார்த்தாலும் உன் உதடை விட்டு
என் உதடை பிரிக்க மாட்டேனே என் கண்ணா கண்ணா
பூகம்பம் புரட்டி விட்டாலும் என் வாழ்நாள் முழுதும்
மடி விட்டு இறங்க மாட்டேனே என் மன்னா மன்னா
தேனுண்ட வாயும் தித்தித்த கையும்
நில் என்று சொன்னாலுமே நில்லாதடி வா வா
நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்
உன் மார்பில் பாய்ந்து கண் மூடி சாய்ந்து
கண்ணாளா தன் மேனியை உன் மீசையில் தேய்ப்பாள்
கண் ஜாடை செய்தாள் கை ரெண்டும் சேர்த்தாள்
ஐயய்யோ என் ஆசையை சொல்லாமலே தீர்ப்பாள்

Writer(s): Vairamuthu

Hariharan feat. Mahalakshmi - Red (Original Motion Picture Soundtrack)
Album Red (Original Motion Picture Soundtrack)
date of release
31-12-2001

Attention! Feel free to leave feedback.