HARINI feat. Hariharan - Telephone Mani Pol Lyrics

Lyrics Telephone Mani Pol - HARINI feat. Hariharan



Telephone மணி போல் சிரிப்பவள் இவளா
Melbourne மலர் போல் மெல்லிய மகளா
Digital'ல் செதுக்கிய குரலா
Elizabeth taylor'ன் மகளா
Zakeer Hussain தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் latest cellular ஃபோனா
Computer கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா
Telephone மணி போல் சிரிப்பவள் இவளா
Melbourne மலர் போல் மெல்லிய மகளா
நீயில்லை என்றால்
வெயிலும் அடிக்காது
துளி மழையும் இருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது
ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரை சொன்னால்
சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே
வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி
நீரில்லை என்றால்
அருவி இருக்காது
மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால்
இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
வெள்ளை நதியே
உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு
Telephone மணி போல் சிரிப்பவள் இவளா
Melbourne மலர் போல் மெல்லிய மகளா
உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தையும் தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்
பெண்கள் வாசம்
என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது
நீ போகும் தெருவில்
ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்
புடவை கடையில்
பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்ட கூடாது
Telephone மணி போல் சிரிப்பவள் இவளா
Melbourne மலர் போல் மெல்லிய மகளா
Digital'ல் செதுக்கிய குரலா
Elizabeth taylor'ன் மகளா
Zakeer Hussain தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் latest cellular ஃபோனா
Computer கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா




HARINI feat. Hariharan - Indian
Album Indian
date of release
23-08-1996



Attention! Feel free to leave feedback.