Harish Ragavendra - Devathaiya Kandein (From "Kadhal Kondaen") Lyrics

Lyrics Devathaiya Kandein (From "Kadhal Kondaen") - Harish Ragavendra

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில்
நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில்
நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில்
நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்
சோழியாய் எனை சுழற்றினாய் சூழ்நிலைதிசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது? என்ன ஆவது?
என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது ...
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில்
நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில்
நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

Writer(s): na muthukumar

Attention! Feel free to leave feedback.
//}