Ilaiyaraaja - Manathil Uruthi Vendum Lyrics

Lyrics Manathil Uruthi Vendum - Ilaiyaraaja




மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்
ஞானதீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
இடைவறும் பலவித தடைகளை தகர்த்திங்கு
வாழ்ந்துக் காட்ட வேண்டும்
இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீயென
யாரும் போற்ற வேண்டும்
இடைவறும் பலவித தடைகளை தகர்த்திங்கு
வாழ்ந்துக் காட்ட வேண்டும்
இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீயென
யாரும் போற்ற வேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும்
மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யார்க்கும்
மாலை வாங்கி போடுவோம்
மாதர் தம்மை கேலி பேசும்
மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யார்க்கும்
மாலை வாங்கி போடுவோம்
வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி
நாடும் ஏடும் பேச வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை
பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையும்
பாட கேட்க வேண்டும்
சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை
பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையும்
பாட கேட்க வேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று
பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மை என்று
எண்ணிடாத பித்தர்களே
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று
பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மை என்று
எண்ணிடாத பித்தர்களே
ஏசினாலும் பேசினாலும்
அஞ்சிடாமல் வாழ வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்
ஞானதீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்



Writer(s): Vaalee, Ilaiyaraaja


Attention! Feel free to leave feedback.