Ilaiyaraaja - Oru Nayagan Lyrics

Lyrics Oru Nayagan - Ilaiyaraaja




ஒரு நாயகன்
உதயமாகிறான்
ஊரார்களின்
இதயமாகிறான்
நினைத்ததை யார்
முடிப்பவன் சொல்
அவனிடம் நான்
படித்தவன்தான்
வாசல் தேடி வந்ததொரு
வசந்த காலம்தான்
ஒரு நாயகன்
உதயமாகிறான்
ஊரார்களின்
இதயமாகிறான்
பூ மாலை புகழ் மாலை
உனைத் தேடி வரும் வேளை
அன்பும் நல்ல பண்பும்
ரெண்டு கண் போல்
காக்க வேண்டும்
வா ராஜா வாவென்று
வரவேற்பு தரும் வேளை
பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு வாழ்த்தை ஏற்க வேண்டும்
இளைஞன் நல்ல கலைஞன்
என்ற பேரை நீ வாங்கு
லலலலலலா லா
நாளும் அந்த பேரால் இந்த
ஊரை நீ வாங்கு
ஒரு நாயகன்
உதயமாகிறான்
ஊரார்களின்
இதயமாகிறான்
பள்ளியிலே பாடங்களை
படிக்கணும்
நல்ல புத்திசாலி பிள்ளையென
நடக்கணும்
சத்துணவு திட்டங்களும் எதுக்குடா
ஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்
பிறர்க்கு உதவணும்
இதை நீ
ஒத்துக்கணும் கத்துக்கணும்
அறிஞனா சிறந்த மனிதனா
புரட்சி தலைவனா
விளங்கும்
காலம் வரும் நேரம் வரும்
எங்க வீட்டு பிள்ளை என்று
தாய்க் குலம்தான் உன்னைக் கண்டு
எந்த நாளும் சொல்லும் வண்ணம்
வள்ளல் போல வாழ வேணும்
உள்ளங்களை ஆள வேணும்
ஒரு நாயகன்
உதயமாகிறான்
ஊரார்களின்
இதயமாகிறான்
மேலாடை மூடாமல்
பாவாடை போடாமல்
பொண்ணு ஒன்னு போனா
கண்ணு பாக்கும் adresss கேட்கும்
பூவும் வண்ண பட்டும்
கொண்டு கொடி போல்
நடை போடு
லலல லாலாலா
நாணம் குல மானம்
தமிழ் பெண்ணின் பண்பாடு
ஒரு நாயகன்
உதயமாகிறான்
ஊரார்களின்
இதயமாகிறான்
நினைத்ததை யார்
முடிப்பவன் சொல்
அவனிடம் நான்
படித்தவன்தான்
வாசல் தேடி வந்ததொரு
வசந்த காலம்தான்
ஒரு நாயகன்
உதயமாகிறான்
ஊரார்களின்
இதயமாகிறான்



Writer(s): Vaalee, Ilaiyaraaja


Attention! Feel free to leave feedback.