S. P. Balasubrahmanyam - Sangeetha Megam Lyrics

Lyrics Sangeetha Megam - Ilaiyaraaja



சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
(லா-லலா-லலா)
(லா-லலா-லலா)
(லா-லலா-ல)
(லா-லலா-லலா)
போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற
ராக நதியினில் நீ நீந்த வா
போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற
ராக நதியினில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே-ஓ-ஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள்
ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள்
ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும்
அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும்
அணையா விளக்கே
கேளாய் பூ மனமே-ஓ-ஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே-ஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்



Writer(s): Ilaiyaraaja, Muthulingam


S. P. Balasubrahmanyam - Udaya Geetham (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.