K. J. Yesudas - Deivam Thantha (From "Aval Oru Thodarkathai") Lyrics

Lyrics Deivam Thantha (From "Aval Oru Thodarkathai") - K. J. Yesudas



தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
நான் கேட்டு தாய்தந்தை படைதாரா
நான் கேட்டு தாய்தந்தை படைதாரா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு
இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு



Writer(s): M. S. VISWANATHAN, KANNADHASAN


K. J. Yesudas - Magical Voice: K. J. Yesudas
Album Magical Voice: K. J. Yesudas
date of release
16-04-2015




Attention! Feel free to leave feedback.