Anuradha Sriram & Chitra - Mallikaiye Mallikaiye Lyrics

Lyrics Mallikaiye Mallikaiye - K. S. Chithra , Anuradha Sriram




மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொல்லுதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்
மாறும் அழகே சரிதான்
இது காதலின் அறிகுறிதான்
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
மாமன் ஜாடை என்னடி
கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிலி
உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால்
அதே பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால்
நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும்
வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா
மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு



Writer(s): Palani Bharathi




Attention! Feel free to leave feedback.