Malaysia Vasudevan - Manithan Manithan Lyrics

Lyrics Manithan Manithan - Malaysia Vasudevan

மனிதன் மனிதன்
எவன்தான் மனிதன்?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும்
பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்.

அடுத்தவீட்டில் தீப்பிடிக்க
நினைப்பவன் மனிதனா?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?
கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா?
கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா?
கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா
கொடுப்பவன் எவனடா அவனே மனிதன்...
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்.
ஏழைப்பெண்ணின் சேலைத்தொட்டு இழுப்பவன் மனிதனா?
இரவில்மட்டும் தாலிகட்ட நினைப்பவன் மனிதனா?
ஏழைப்பெண்ணின் சேலைத்தொட்டு இழுப்பவன் மனிதனா?
இரவில்மட்டும் தாலிகட்ட நினைப்பவன் மனிதனா?
காதல் என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா?
கற்பைமட்டும் கரண்சி நோட்டில் கறப்பவன் மனிதனா?
தன்மானம் காக்கவும்
பெண்மானம் காக்கவும்
துடிப்பவன் எவனடா அவனே மனிதன்...
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும்
பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்.

Writer(s): Chandra Bose, V Senthil Nathan

Attention! Feel free to leave feedback.
//}