Mano - Uzhaippali Illatha Lyrics

Lyrics Uzhaippali Illatha - Mano



உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத
பேருதான் எங்கும் இல்லேயா அர ஹோயா
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத
பேருதான் எங்கும் இல்லேயா அர ஹோயா
அட சாமியோ சாமி
அப்படி இருந்திட்டா காமி
கூலியோ கூலி
எங்கள நம்பித்தான் பூமி
பிறர் வாழ்வதே
எங்க வேர்வையில் தான்
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத
பேருதான் எங்கும் இல்லேயா அர ஹோயா ஹோயா
தலை மேலே சாப்பாடு கொண்டாரும் கப்பக்கெழங்கே
அம்மம்மா ஹா அங்கம்மா ஹா
சில போல ஷோக்காக உன்ன தான் பெத்து போட்டுட்டா
உங்கம்மா ஹா மங்கம்மா ஹா
அட பலவூட்டு பலகாரம் ஒண்ணான கூட்டாஞ்சோறு தான்
சின்னையா ஹா பொன்னையா ஹா
பல சாதி இது போல ஒண்ணானா சண்டை வருமா ஹோய்
செல்லையா ஹா சொல்லையா ஹா
நித்தமும் பாடுபட்டு உழைக்கும் யாவரும் ஓரினம் தான்
சத்திய வார்த்தை இத நமக்கு சொல்லுது மே தினம் தான்
நாமெல்லாம் வேலை நிறுத்தம்
செஞ்சா தாங்காது நாடு முழுதும்
நாம் இன்றி என்ன நடக்கும்
நம்ம கை தாண்டா ஓங்கி இருக்கும்
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானுன்டா ஹோய்
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா
பணக்காரன் குடி ஏற பாட்டாளி வீடு கட்டுறான்
கல்லாலே ஹே மண்ணாலே ஹே
ஆனாலும் அவனுக்கோர் வீடில்ல யாரு கேக்குறா
துக்கம் தான் ஹா சொன்னாலே ஹா
பல பேரு தான் உடுத்த நெசவாளி நூல நெய்யுறான்
பொன்னான ஹா கையாலே ஹா
அட ஆனாலும் அவனுடுத்த வேட்டி இல்ல
யாரு கேக்குறா ஹோய்
துக்கம் தான் ஹா சொன்னாலே ஹா
சம்பளம் வாங்கியதும் முழுசா வீட்டிலே சேர்த்திடுங்க
மத்தியில் யார் பறிப்பா பறிச்சா முட்டிய பேத்துடுங்க
அஞ்சாம தொழில செஞ்சா
நம்ம யாராச்சும் அசைப்பானா
ஒண்ணாக இருந்தாக்கா
இங்கே வாலாட்ட நெனைப்பானா
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானுன்டா
ஹோய் ஹோய் ஹோய்
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத
பேருதான் எங்கும் இல்லேயா அர ஹோயா
அட சாமியோ சாமி
அப்படி இருந்திட்டா காமி
கூலியோ கூலி
எங்கள நம்பித்தான் பூமி
பிறர் வாழ்வதே
எங்க வேர்வையில் தான்
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத
பேருதான் எங்கும் இல்லேயா அர ஹோயா



Writer(s): Ilaiyaraaja, Vaali Vaali


Mano - Uzhaippali
Album Uzhaippali
date of release
01-01-1993




Attention! Feel free to leave feedback.