Mano feat. K. S. Chithra - Enna Marandha - From "Pandithurai" Lyrics

Lyrics Enna Marandha - From "Pandithurai" - K. S. Chithra , Mano




என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறக்கவில்லையே
என் ராசாதி ராசனிருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே
உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக் கிளி நான்
பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்
வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்
போடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு பாடி வரும் பொண்ணு ஒண்ணு
என் ராகம் கேக்கவில்லையா
மாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா
பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி
கண்ணீரு விட்டுக் கலங்கும்
கண்ணான மாமன் எண்ணம் காட்டாறப் போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்.
உன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்
ஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்ட
மெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்




Attention! Feel free to leave feedback.