Mano feat. S. Janaki - Kadhoram Loolakku (From "Chinna Mapillai") Lyrics

Lyrics Kadhoram Loolakku (From "Chinna Mapillai") - S. Janaki , Mano




காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்
காதோரம்...
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்(2)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
காதோரம்...
வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு(2)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னைத் தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
காதோரம்...





Attention! Feel free to leave feedback.