A. R. Rahman - Kannuodu Kaanbadhalam (From "Jeans") Lyrics

Lyrics Kannuodu Kaanbadhalam (From "Jeans") - Nithya Sree



கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும்
பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும்
காதல் என்பது ஒன்றல்லோ
கண்ணோடு காண்பதெல்லாம்
தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
அன்றில் பறவை இரட்டைப் பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி
ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில்
இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான்
தனித் தனியே தேடுகின்றோம்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை



Writer(s): a. r. rahman


A. R. Rahman - Hits of A.R.Rahman Nenjame
Album Hits of A.R.Rahman Nenjame
date of release
25-12-2013



Attention! Feel free to leave feedback.