Yuvan Shankar Raja - Endha Pakkam (feat. Chinmayi Sripada) Lyrics

Lyrics Endha Pakkam (feat. Chinmayi Sripada) - Radhul Nambiar feat. Chinmayi Sripada



எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்
என் ராஜாபைய நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கண்ணம் நான் ஆகும்
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காதே
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய
வேறு காதல் நதி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக்காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு... ஓ...
ஹோ... ஹோ... ஹோ...
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா
உயிரைத் தருகின்றாய்
உன் உச்சந்தலையைத் தீண்ட
ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே...
ஓ... ஓ... ஹோ...
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நான் எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
நீ தாவி தாவி தழுவும்போதும் தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்
உன் மடியில் எந்தன் கண்ணீர் வடியுமடி
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் காணீர் ஏந்தும் கன்னம் நானாகும்



Writer(s): Vairamuthu


Yuvan Shankar Raja - Dharmadurai (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.