Lyrics Neerveezhchi Thee Muttuthey - S. Janaki
நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே
நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
தெம்மாங்கு மழை வந்து பெய்யுது
தேன் சிட்டு நனைகின்றது
கண் மீன்கள் கரைவந்து கொஞ்சுது
மீன் கொத்தி மிரள்கின்றது
தண்ணீரின் சங்கீத கொலுசுகள்
மலை வாழை கனவோடு அணிய
இளங்காலை ஒளித்தூறல் கசிந்திட
முடி நெளிகள் பொன்சூடி மகிழ
இமையாலே... இதழாலே...
விரலாலே... இரவாலே...
அங்கங்கள் சிருங்கார ஓடைகள்
அணைமீற விடை சொல்லும் ஆடைகள்
நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே
நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
பொன்னந்தி இருள் வாரி முடியுது
மோகப் பூ குவிகின்றது
கண்ணங்கே இமை மீறி நுழையுது
காதல் பூ மலர்கின்றது
துரும்பொன்று இமை சேரும் பொழுதினில்
முள் என்று துடிக்கின்ற மனசு
மழை வில்லில் கயிறாடும் நினைவினில்
மனம் துள்ள உயிராகும் உறவு
பொன் ஊஞ்சல்... பூ ஊஞ்சல்...
அம்மம்மா இது காதல்
அணுவெங்கும் கார்காலம் வளருது
பலநூறு தீபங்கள் மலருது...
நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே
லா லா லா லா...
லா லா லா லா...
லா லா லா லா...
லா லா லா லா...
லா லா லா லா...

Attention! Feel free to leave feedback.