S. P. Balasubrahmanyam - Vetri Meethu Vetri Vandhu - Original Lyrics

Lyrics Vetri Meethu Vetri Vandhu - Original - S. P. Balasubrahmanyam

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக்கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக்கண்டேன்
உண்னாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
உண்னாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
கற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அதை உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் தண்ணீராகும்
அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் தண்ணீராகும்
ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால்தான் நனவுகளாகும்
ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால்தான் நனவுகளாகும்
அன்று தொட்டு நீ நினைத்த என்னம் என்னம்மா
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

Writer(s): M.s. Viswanathan, Vaalee

Attention! Feel free to leave feedback.