Sadhana Sargam & Balram - Panikatre Panikatre (From "Run") Lyrics

Lyrics Panikatre Panikatre (From "Run") - Sadhana Sargam & Balram




பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
சத்தம் இல்லா தீபாவளியாய் நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சை திண்டாடு
உயிரால் உயிரே அன்பே நீ மூடு
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
நாம் வாழும் வீடு ஆள்இல்லா தீவு யாருக்கும் அனுமதி கிடையாது
வழி மாறி யாரும் வந்தாலும் வரலாம் வீட்டுக்கு முகவரி கூடாது
நான் தேடும் முகமானாய் நான் வாங்கும் மூச்சானாய்
உயிரோடு உயிரானாய் நான் எல்லாம் நீ யானாய்
எதை இழந்தாலும் இழப்பேன் உன்னை மட்டும் நீங்க மறுப்பேன்
ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
ஓ. தூக்கங்கள் உனது கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளி போடாதே
பாதைகள் உனது பாதங்கள் எனது பயணத்தை தள்ளி போடாதே
நீ நினைத்தால் மறுகணமே உன்னருகே நான் இருப்பேன்
உன் வழியில் கால் மிதியாய் மேகங்களை நான் விரிப்பேன்
இருவருமே தூங்கிவிடலாம் சில ஜென்மம் தாண்டி எழலாம்
கனவில் நாம் மீண்டும் சந்திபோம்
பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா
சத்தம் இல்ல தீபாவளியை நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சை திண்டாடு
உயிரால் உயிரே அன்பே நீ மூடு
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா




Attention! Feel free to leave feedback.
//}