Shankar Mahadevan - En Anbay Lyrics

Lyrics En Anbay - Shankar Mahadevan



என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையாடுதே
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரதத்தில் விளையாடுதே
சகி... வா சகி ...
ப்ரிய சகி... ப்ரிய சகி...
என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்றரின்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தாயடி
மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
உன் படை கொண்டு எனை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்
அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுபக்கம் நீ கட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே
சகி... வா சகி...
ப்ரிய சகி... ப்ரிய சகி...
என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
சகி ... வா சகி...
ப்ரிய சகி... ப்ரிய சகி...
சகி... வா சகி...
ப்ரிய சகி... ப்ரிய சகி(ப்ரிய சகி...)




Shankar Mahadevan - Mounam Pesiyathey (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.