Sid Sriram - High On Love Lyrics

Lyrics High On Love - Sid Sriram




Hey பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே
ஜன்னல் ஓரமாய் முன்னாலே
Hey மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஓர் சொர்கத்தை
மண்ணில் எங்குமே தந்தாயே
விழியை நீங்கி நீ விலகாதே
நொடியும் என் மனம் தாங்காதே
என்ன நேருமோ தெரியாதே
என் ஜீவன் ஏங்குதே
என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே
உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா
குருவி போலவே என் உள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள்
சுத்தி திரியுதே பின்னாலே
தீயை போலவே என் தேகம்
பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவே ஆனந்தம்
நில்லாமல் பாயுதே
Hey பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஓ...
प्यार ப்ரேம காதல்
प्यार ப்ரேம காதல்
प्यार ப்ரேம காதல்
प्यार ப்ரேம காதல்



Writer(s): Yuvan Shankar Raja


Attention! Feel free to leave feedback.