Lyrics Kudhambai - Sounds of Isha
குதம்பாய்
அண்டத்துக்
கப்பால்
அகன்ற
சுடரினைப்
பிண்டத்துள்
பார்ப்பாயடி
குதம்பாய்
பிண்டத்துள்
பார்ப்பாயடி.
தீர்க்க
ஆகாயம்
தெரியாத
தன்மைபோல்
பார்க்கப்
படாதானடி
குதம்பாய்
ர்க்கப்படா
தானடி.
வெட்டவெளிக்குள்
வெறும்பாழாய்
நின்றதை
இட்டமாய்ப்
பார்ப்பாயடி
குதம்பாய்
இட்டமாய்ப்
பார்ப்பாயடி.
தாவார
மில்லை
தனக்கொரு
வீடில்லை
தேவார
மேதுக்கடி
குதம்பாய்
தேவார
மேதுக்கடி.
என்றும்
அழியாமை
எங்கும்
நிறைவாகி
நின்றது
பிரமமடி
குதம்பாய்
நின்றது
பிரமமடி.

Attention! Feel free to leave feedback.