Udit Narayan feat. Hariharan - Romeo Aattam Pottaal - From "Mr. Romeo" Lyrics

Lyrics Romeo Aattam Pottaal - From "Mr. Romeo" - Hariharan , Udit Narayan



ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல் வாங்கி
வந்த தேகம் இது
ரப்பர் போல சொன்ன படி
துள்ளுது பார்
ரோமியோஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
ஏழையை தூக்கி எறியாதே
நிலவே நிலவே நிலவே நிலவே
அடடா ஜாதி குதிரை இது
என்னை தான் தேடி திரிகிறது
கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன்
கழுத்தின் கீழே புறாக்கள் கண்டேன்
ஒரு கண்ணில் பார்த்தாலே
ஒரு வாரம் எழ மாட்டேன்
இரு கண்ணில் பார்த்தாலோ
என்ன ஆகும் சொல்ல மாட்டேன்
இந்த ரோட்டு தாமரை என்ன விலையோ
இவள் கண்ணில் மிதப்பது என்ன கலையோ
சிரிக்கும் போது சிலிர்த்து கொண்டேன்
இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்தி கொண்டேன்
ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
ஏழையை தூக்கி எறியாதே
எனக்கு ராஜ மச்சம் இருக்கு
இனிமேல் யோகம் உச்சம் இருக்கு
காற்றிலே ஏறி உலாவும் வருவேன்
கை காலை நீட்டி நிலாவை தொடுவேன்
யாரையும் தூசி போலே
துச்சம் என்று எண்ணாதே
திருகாணி இல்லை என்றால்
ரயிலே இல்லை மறவாதே
என்னை ரோட்டில் எரிந்தது
உனது விதி
நான் சாலை மனிதனின்
பிரதிநிதி
பிறக்கும் முன்னே
விழித்து கொண்டேன்
அன்னையின் கருவினில் புரண்டதும்
நடனம் தொடங்கி விட்டேன்
ரோமியோஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே
ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல்
வாங்கி வந்த தேகம் இது
ரப்பர் போல சொன்ன படி
துள்ளுது பார்
ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே




Udit Narayan feat. Hariharan - Dance Hits of A. R. Rahman
Album Dance Hits of A. R. Rahman
date of release
13-02-2017



Attention! Feel free to leave feedback.