Yuvan Shankar Raja, VV Prassanna & Sonia - Kurunthogai Lyrics

Lyrics Kurunthogai - Sonia , Yuvan Shankar Raja , VV Prassanna



குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்
இன்பத்து பால் சொல்லும் இளய வேந்தே
பொருட் பாலை எப்போது காட்டுவாய்
ஈசன் எழுதிய ஓலை களில்
அக்கால காதல் உருவாகும்
ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்
நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்
இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட் பாலை உன்னோடு யோசிப்பான்
சதை மோகம் என்னும் மேகம் இரு கண்ணை மூடுமே
பசி தாகம் வந்து காதை மூட
உண்மை தோணுமே
இது ஒளவையாரின் கேள்வி என் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும் போது அழகாய் வைகிறாய்
இல்லறம் புல்லா வினைத்தொகையும் அளபேடயும் முதல் பாத்து
சத்தியமடி தமிழ் நமக்கு உணவளிக்கும் தடை ஏத்து
பொய்யோ சொல்வது மெய்யோ நம்பவா நான்
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்
இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட் பாலை உன்னோடு யோசிப்பான்
உன் மூளை கொண்டு பார்த்தால் அது கணிதம் ஆகுமே
நீ நெஞ்சு கொண்டு காணும் போது நேசம் தோன்றுமே
விழி மூடி கொண்டு காண என் நெஞ்சே போதுமே
நீ மூடி வைத்த உண்மை காண மூளை வேணுமே
கணித மேதை ராமானுஜம் பெத்த பொண்ணு நீ தானா
கற்பனை பண்ணும் மஹா கவி கம்பன் மகன் நீ தானா
அம்மெ தமிழில் எம்மெ நம்பி வா வா
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்
இன்பத்து பால் சொல்லும் இளய வேந்தே
பொருட் பாலை எப்போது காட்டுவாய்



Writer(s): Vairamuthu, Yuvanshankar Raja


Yuvan Shankar Raja, VV Prassanna & Sonia - Idam Porul Yaeval (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.