Yuvan Shankar Raja feat. Prithivee - Agalaathey Lyrics

Lyrics Agalaathey - Yuvan Shankar Raja , Prithivee




நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்கள்
சிறகாய் சேர்ந்திருப்போம்
அகலாதே அகலாதே
நொடிகூட நகராதே
செல்லாதே செல்லாதே
கணம் தாண்டி போகாதே
நகராமல் உன்முன் நின்றே
பிடிவாதம் செய்ய வேண்டும்
அசராமல் முத்தம் தந்தே
அலங்காரம் செய்ய வேண்டும்
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்கள்
சிறகாய் சேர்ந்திருப்போம்
நீ எந்தன் வாழ்வில் மாறுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயும் மனைவியே
பொய் கோப புதல்வியே
நடு வாழ்வில் வந்த உறவு நீ
நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ
என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிரை அளந்தவள்
உன் மருதை என் மரமாய் ஆனதே
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்(ஒன்றாய் வாழ்ந்திருப்போம்)
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்கள்
சிறகாய் சேர்ந்திருப்போம்(சிறகாய் சேர்ந்திருப்போம்)



Writer(s): Yuvan Shankar Raja



Attention! Feel free to leave feedback.