A.R. Rahman, S. P. Balasubrahmanyam & Swarnalatha - Sollaayo Sola Killi paroles de chanson

paroles de chanson Sollaayo Sola Killi - A. R. Rahman , S. P. Balasubrahmanyam , Swarnalatha




சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே
சொல்லாது சோலைக்கிளி
சொல்லைக் கடந்த காதல் இது
கண் மூலம் காதல் பேசுதே
பச்சைக்கிளை இலைகளுக்குள்ளே
பச்சைக்கிளி ஒளிதல் போல
இச்சைக்காதல் நானும் மறைத்தேன்
பச்சைக்கிளி மூக்கைப் போல
வெட்கம் உன்னை காட்டிக்கொடுக்க
காதல் உள்ளம் கண்டுபிடித்தேன்
பூவில்லாமல் சோலை இல்லை
பொய் இல்லாமல் காதல் இல்லை
பொய்யைச்சொல்லி காதல் வளர்த்தேன்
பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி
எல்லாப்பூட்டும் இன்றே திறந்தேன்
சொல்லாதே சோலைக்கிளி
சொல்லைக் கடந்த காதல் இது
கண் மூலம் காதல் பேசுதே
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே
சேராத காதலர்கெல்லாம்
சேர்த்து நாம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானை அளப்போம்
புதிய கம்பன் தேடிப்பிடித்து
லவ்வாயணம் எழுதிடச் செய்வோம்
நிலவில் கூடி கவிதை படிப்போம்
கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்
நெஞ்சும் நெஞ்சும் மோதிக்கொள்வோம்
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்
பூவும் பூவும் மோதிக்கொண்டால்
தேனைத்தனே சிந்திச் சிதறும்
கையில் அள்ளி காதல் குடிப்போம்



Writer(s): Vairamuthu



Attention! N'hésitez pas à laisser des commentaires.