S. P. Balasubrahmanyam - Vaikaaraiyil (From "Vaanmathi") paroles de chanson

paroles de chanson Vaikaaraiyil (From "Vaanmathi") - Deva




வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
இதுபோல் தொடரும்
இந்த காதல் கதை
காலம் உள்ள காலம் வரை
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
இதுதான்பருவம் தினம் பயிலும்
இதழ் உரசும் இந்த சரசம்
இதமாய் நழுவும் இந்த தருணம்
வந்த விரகம் மெல்ல விலகும்
முத்தங்கள் ஒவ்வொன்றும்
முத்துப்போல் பதிக்க
கன்னங்கள் ஒவ்வொன்றும்
தென்னங்கள் வடிக்க
ஹோய் பக்கம் வரும் போது
அள்ளிக் கொடு பட்டுப் படித்தேனே
தொட்டுத் தழுவாது
அந்தி பகல் பித்து பிடித்தேனே
உன்னை நான் தொட
என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயோ
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
பல நாள்
இரவில் பனி நிலவில்
இவள் இளைத்தாள் உந்தன் நினைவில்
அடடா
இது போல் ஒரு சபலம்
ஒரு சலனம் சில சமயம்
ஒட்டிக்கொள் கட்டிக்கொள்
உன்னில் நான் கலக்க
அம்மம்மா அச்சம்தான்
என்னென்று விளக்க
பள்ளியறைப் பாட்டின்
பல்லவியை சொல்லித் தரலாமா
சொல்லித்தரும் போது
சின்ன இடை துன்ப படலாமா
ஹ்ம்ம் மிச்சம் மீதியும்
மத்த சேதியும் முதல் ராத்திரி தானா
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
இதுபோல் தொடரும்
இந்த காதல் கதை
காலம் உள்ள காலம் வரை
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி



Writer(s): Deva, Vaali


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}