Deva feat. Krishnaraj - Thanjavooru Mannu Eduthu paroles de chanson

paroles de chanson Thanjavooru Mannu Eduthu - devA , Krishnaraj



தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணி தண்ணீய விட்டு!
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணி தண்ணீய விட்டு!!
சேர்த்து சேர்த்து
செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மை இல்ல
பொம்மை இல்ல உண்மை!!!
எத்தனையோ பொம்மை செஞ்சேன்
கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன்
கண்ணம்மா
அடி அத்தனையும்
உன்னைப்போல மின்னுமா
பதில் சொல்லம்மா!!!!
தந்தானே தந்தானே
தந்தானக்குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே!
தந்தானே தந்தானே
தந்தானக்குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே!!
(இசை)
மூக்கு செஞ்ச மண்ணு
அது மூணாறு
பட்டுக்கன்னம் செஞ்ச மண்ணு
அது பொன்னூரு!
காது செஞ்ச மண்ணு
அது மேலூரு
அவஉதடு செஞ்ச மண்ணு
மட்டும் தேனூரு!!
கருப்புக் கூந்தல் செஞ்சது
கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது
சங்ககிரி மண்ணுங்க!!!
வாய் அழகு செஞ்சதெல்லாம்
வைகை ஆத்து மண்ணுங்க
பல் அழகு செஞ்சது
முல்லையூரு மண்ணுங்க!!!!!
நெத்தி செய்யும் மண்ணுக்கு
சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து
நெத்தி செஞ்சேன் பாருங்க!!!!!!
தந்தானே தந்தானே
தந்தானக்குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே!!!
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணி தண்ணீய விட்டு!
சேர்த்து சேர்த்து
செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மை இல்ல
பொம்மை இல்ல உண்மை!!
(இசை)
தங்கவயல் மண்ணெடுத்தேன்
தோளுக்கு
நான் தாமிரப்பாடி மண்ணெடுத்தேன்
தனத்துக்கு!
வாழையூத்து மண்ணெடுத்தேன்
வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன்
இடுப்புக்கு!!
காஞ்சிபுரம் வீதியிலே மண்ணெடுத்தேன்
கைகளுக்கு
சீரங்கம் மண்ணெடுத்தேன்
சின்னப்பொண்ணு விரலுக்கு!!!
பட்டுக்கோட்டை ஓடையிலே மண்ணெடுத்தேன்
காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியிலே மண்ணெடுத்தேன்
நகத்துக்கு!!!!
ஊரெல்லாம் மண்ணெடுத்து
உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான்கொடுத்து
உசுரு தந்தேன் கண்ணுக்கு!!!!!
தந்தானே தந்தானே
தந்தானக்குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே!!!!
போடு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணி தண்ணீய விட்டு!
சேர்த்து சேர்த்து
செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மை இல்ல
பொம்மை இல்ல உண்மை!!
எத்தனையோ பொம்மை செஞ்சேன்
கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன்
கண்ணம்மா
அடி அத்தனையும்
உன்னைப்போல மின்னுமா
பதில் சொல்லம்மா!!!!
தந்தானே தந்தானே
தந்தானக்குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே!!!!!
(இசை)
தமிழாக்கம்:(செந்தில்&ஜெயபால்)
(முற்றும்)



Writer(s): Vairamuthu


Deva feat. Krishnaraj - Porkaalam (Original Motion Picture Soundtrack)



Attention! N'hésitez pas à laisser des commentaires.