Hariharan - Mudhal Mudhalaga paroles de chanson

paroles de chanson Mudhal Mudhalaga - Hariharan




முதன்முதலாக முதலாக
இதமான வலி ஒன்றை
நான் பார்க்கிறேன்
என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
உயிருக்குள் புதுக்கூச்சல்
நான் கேட்கிறேன்
இது மழை தேடும் தாகம் தானா
இது வாலிப காய்ச்சல் தானா
இந்த இம்சைதான் காதல்
பூந்தோட்டமா அன்பே
கொல்லாதடி கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை கிள்ளாதடி
முதன்முதலாக முதலாக
இதமான வலி ஒன்றை
நான் பார்க்கிறேன்
என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
உயிருக்குள் புதுக்கூச்சல்
நான் கேட்கிறேன்
இது மழை தேடும் தாகம் தானா
இது வாலிப காய்ச்சல் தானா
இந்த இம்சைதான் காதல்
பூந்தோட்டமா அன்பே
கொல்லாதடி கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி
அமுதம் கொஞ்சம், அமிலம் கொஞ்சம்
என் மேஜை உணவாய் இருக்கின்றதே
தீயில் கொஞ்சம், பூவில் கொஞ்சம்
என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே
சுடும் கண்ணீர் கொஞ்சம்
குளிர் வெந்நீர் கொஞ்சம் எனை
குளிப்பாட்டி அழகாக்கி கொஞ்சம்
இந்த இம்சைகள் வேண்டும்
இன்னும் கொஞ்சம்
கொல்லாதடி கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி
உன்னாலே உன்னாலே
எல்லாமே எல்லாமே
உன்னாலேதான்
இந்த தடுமாற்றம்
தடம் மாற்றம் உருமாற்றம்
எல்லாமே உன்னாலேதான்
குளிர்காலத்தில் icecream கேட்கும்
சரியான தவறு இதுவேதானா
புலிவேட்டைக்கு தூண்டில் கேட்கும்
தெளிவான குழப்பம் இதுவேதானா
அட ஜில்லென்றுதான்
சில வெப்பம் வெப்பம்
உன் துப்பட்டா மோதல்கள் தருமா
என் உதட்டில் உன் வார்த்தை உயிரூற்றுமா
கொல்லாதடி கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை கிள்ளாதடி
உன்னாலே உன்னாலே
எல்லாமே எல்லாமே
உன்னாலேதான்
இந்த தடுமாற்றம்
தடம் மாற்றம் உருமாற்றம்
எல்லாமே உன்னாலேதான்



Writer(s): Victor Doss


Attention! N'hésitez pas à laisser des commentaires.