Harris Jayaraj feat. KK & Shreya Ghoshal - Konji Konji paroles de chanson

paroles de chanson Konji Konji - Harris Jayaraj , KK , Shreya Ghoshal



கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
இஞ்சி மனம் தேடுது உன்னையே
உருகாதே உருகாதே நெஞ்சமே
உச்சி நிலா நேரத்தில் வந்தியே
நட்சத்திர தூரத்தில் நின்னியே
தரை மேலே தவித்தேனே நித்தமே
அட ஒன்ன போல ஒருத்தி இந்த
உலகில் கிடைக்குமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா
மேகம் கொடுக்குமா
என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசிர பாப்பேன்
நீயே வந்து சொல்லு
கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
இஞ்சி மனம் தேடுது உன்னையே
உருகாதே உருகாதே நெஞ்சமே
ஆ...
உனக்குள்ளே நான் வாழ்கிறேன்
உயிரோடு தோள் சாய்கிறேன்
உலகமே ஓர் வானம் தான்
ஒரே நிலா உன்னோடு தான்
கடவுளின் புனை பெயர் தாய் ஆகும்
காதலின் புனை பெயர் நீ ஆகும்
அலைகளில் தொலைந்தது என் பாதம்
பயணத்தை தொடர்ந்திட நீ போதும்
கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
இஞ்சி மனம் தேடுது உன்னையே
அணைக்காமல் அணையாதே நெஞ்சமே
ஓ... உச்சி நிலா நேரத்தில் வந்தேனே
நட்சத்திரம் போலவே நின்னியே
தரை மேலே எனை நானே தந்தேனே
அட ஒன்ன போல ஒருத்தி இந்த
உலகில் கிடைக்குமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா
மேகம் கொடுக்குமா
என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசிர பாப்பேன்
நீயே வந்து சொல்லு
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
திரனா திரனா திரனா ஆ...



Writer(s): Harris Jayaraj, Snehan


Harris Jayaraj feat. KK & Shreya Ghoshal - The Legend (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.