Ilaiyaraaja - Kaatrum Poovum paroles de chanson

paroles de chanson Kaatrum Poovum - Ilaiyaraaja

காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது
காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா
காதில் கேட்கிறதா
காவேரி என்றால் கரையில் அடங்கும்
கடலினை தேடி முடிவில் ஒடுங்கும்
காதலில் எண்ணம் அடங்குவதில்லை
அடங்கிட நானும் காவேரி இல்லை
வார்த்தையில் சொல்ல வாய் வரவில்லை
வந்தென்னை கூட நீ வரவில்லை
வாடும் இவளோ கொடி முல்லை
காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா
காதில் கேட்கிறதா
வழியை தேடும் இவள் ஓர் பறவை
வகைதெரியாமல் வளர்த்தால் உறவை
தனி இடம் தேடி தினம் அழலானாள்
வெயிலினால் வாடி இவள் சருகானாள்
கனவினில் தானே வாழுகிறாள்
கண்ணில் வரும் நீர் ஆடுகிறாள்
காதல் சோகம் பாடுகிறாள்
காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது
காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா
காதில் கேட்கிறதா

Ilaiyaraaja - Kavithai Paadum Alaigal (Original Motion Picture Soundtrack) - EP

Attention! N'hésitez pas à laisser des commentaires.