K. Veeramani - ENGEY MANAKKUTHU paroles de chanson

paroles de chanson ENGEY MANAKKUTHU - K. Veeramani



சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
சாமியே
ஐயப்போ
சாமியே
ஐயப்போ
சாமியே
ஐயப்போ
சுவாமியே... சரணம் ஐயப்பா
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
என்ன மணக்குது
மலையில் என்ன மணக்குது
இன்பமான ஊது வத்தி அங்கே மணக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
எங்கே மணக்குது
நெய்யும் எங்கே மணக்குது
எங்கே மணக்குது
நெய்யும் எங்கே மணக்குது
வீர மணிகண்டன் சன்னதியில்
நெய்யும் மணக்குது
திருநீரும் மணக்குது பன்னீரும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில்
அருளும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில்
அருளும் மணக்குது
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே
அன்பு மணக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டா பக்தி பிறக்குது
அந்தப் பனி மலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டா பக்தி பிறக்குது
அந்தப் பனி மலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவானப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
பகவானப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
பதினெட்டாம் படி தொட்டா
வாழ்வும் இனிக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
சுவாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்
சுவாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்
பேட்டை துள்ளி ஆடும் போது மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
பேட்டை துள்ளி ஆடும் போது மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
காட்டுக்குள்ளே சரண கோஷம் வானைப் பிளக்குது...
சாமியே... சரணம் ஐயப்பா
காட்டுக்குள்ளே சரண கோஷம் வானைப் பிளக்குது
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டில் இருக்குது
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டில் இருக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான்
பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான்
நோன்பிருந்து வருவோரை தாங்கி நிற்கிறான்
நோன்பிருந்து வருவோரை தாங்கி நிற்கிறான்
ஓம்கார நாதத்திலே எழுந்து வருகிறான்
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
சாமி ஐயப்பா... சாமி ஐயப்பா...
சாமி ஐயப்பா... சாமி ஐயப்பா...



Writer(s): Somu, K. Veeramani


K. Veeramani - THULASI MANIMAALAI (REVIVAL)
Album THULASI MANIMAALAI (REVIVAL)
date de sortie
01-01-2011




Attention! N'hésitez pas à laisser des commentaires.