Kamal Hassan, Chorus, A.R. Rahman & Sujatha - Alangatti Mazhai paroles de chanson

paroles de chanson Alangatti Mazhai - Sujatha , Chorus , Kamal Hassan



ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா?
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா?
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்ட சமாதனமாச்சா?
இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சு
என்ற விசனம் மறந்து காத்தோட போயாச்சு
ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா...
ஹோ...
குளம் காட்டும் வெண்ணிலவாய்
அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் கலையலாமா?
கல் ஒன்று விழுவதினால்
தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பெனும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே
பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
பி... பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க அவர் நிழல் கூட ஏங்குதம்மா
ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா...
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா?
ஆற்றோர நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில பழம் பறிச்சு விதையில தென்ன வளர்க்க
ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்துட்டுது
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்துட்டுது
சமரசம் செய்ய தெனாலி வந்தானே
சின்ன சின்ன சண்டை சமாதானம் தானே
துள்ளி குதிச்சு குதிச்சு கொறையுது வயசு
இப்ப சிரிச்சு சிரிச்சு நோய் எல்லாம் போயாச்சு
ஐயோடா இது கனவில்லை எண்டு காதில் சொல்லுங்கோ
அய்யோடா இது நிரந்தரம் எண்டு வரம் தாருங்கோவன்
அய்யோடா...



Writer(s): KUMAR KALAI, A R RAHMAN, KALAI KUMAR


Kamal Hassan, Chorus, A.R. Rahman & Sujatha - iRahman - 15 Essential Tracks: Vol. 1 Tamil
Album iRahman - 15 Essential Tracks: Vol. 1 Tamil
date de sortie
24-03-2009



Attention! N'hésitez pas à laisser des commentaires.