Malaysia Vasudevan - Aasai Magane paroles de chanson

paroles de chanson Aasai Magane - Malaysia Vasudevan



ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி
கரிச காட்டு கள்ளியிலே
நீ மொளைச்சவண்ட
உன்ன கல் சுமந்தாச்சும்
படிக்க வைப்பான் உன் அப்பன்டா
வெட்டருவா வேணாம் வேல்கம்பும் வேணாம்
கத்தியெல்லாம் தூரபோட்டு புத்தைகத்தை தூக்கு
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி
ஆட்டு ஈரல் சுட்டுத்தாரேன்
அச்சு வெல்லம் தொட்டுத்தாரேன்
நாட்டு கோழி சாறு எறக்கி
நல்லெண்ணெய்யும் ஊத்தித்தாரேன்
புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தும்
புத்திக்குள்ள சேரணுமே
நீ பொன்னு மெடல் வாங்கணுமே
உனக்கு வந்த புகழால்
எனக்கு முறுக்கு மீசை ஏறனுமே
ஊர் கிறுக்கு பிடிச்சு போகணுமே
மகனே உன் உச்சந்தலையில்
எண்ணெய் வச்சி தேக்கிறேன்டா
மகனே உன் படிப்புக்காக
என்னை நானே தேக்கிறேன்டா
நீ சுடச்சுட சுடச்சுட படிடா
நீ சூரியனை எழுப்பி விடுடா
நீ சுடச்சுட சுடச்சுட படிடா
நீ சூரியனை எழுப்பி விடுடா
அன்பு மகன் வாழ்க ஆறும் ஊரும் வாழ்க
உன் எஸ் ஓரத்தில் அப்பன் பேரும் வாழ்க
ஆசை மகனே ஆசை மகனே எந்திரிநாளை நீதான்டா மந்திரி
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி
காட்டு வெயிலில் பஞ்சம் பொழச்சோம்
கலப்பை வித்து கஞ்சி குடிச்சோம்
எருமை தயிரு சோறு போட்டு
உன்ன மட்டும் ஊட்டி வளத்தோம்
மொத்தம் எல்லாம் செலவழிச்சாலும்
மிச்சம் இருப்பது நீ அல்லவா
நீ வெதைக்கு வச்ச நெல் அல்லவா
நாட்டரங்காலில்
நான் உன்ன விதைச்சேன்
நாளை விளைச்சல் நீயல்லவா
நீ நாட்டுக்கெல்லாம் உணவல்லவா
மழை பார்க்கும் மானாவாரி
வருஷம் ஒரு நாள் விளையுமடா
மழைக்கால இரவும்கூட
மறு நாள் நிச்சயம் விடியுமடா
நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா
அந்த சரஸ்வதி வருவா வாடா
நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா
அந்த சரஸ்வதி வருவா வாடா
அன்பு மகன் வாழ்க ஆறும் ஊரும் வாழ்க
உன் எஸ் ஓரத்தில் அப்பன் பேரும் வாழ்க
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி
கரிச காட்டு கள்ளியிலே
நீ மொளைச்சவண்ட
உன்ன கல் சுமந்தாச்சும்
படிக்க வைப்பான் உன் அப்பன்டா
வெட்டருவா வேணாம் வேல்கம்பும் வேணாம்
கத்தியெல்லாம் தூரபோட்டு புத்தைகத்தை தூக்கு



Writer(s): Vairamuthu


Malaysia Vasudevan - Vaanavil (Original Motion Picture Soundtrack)
Album Vaanavil (Original Motion Picture Soundtrack)
date de sortie
01-12-2000




Attention! N'hésitez pas à laisser des commentaires.