Mano feat. Febi - Kikku Aerudae paroles de chanson

paroles de chanson Kikku Aerudae - Mano & Febi




கிக்கு ஏறுதே
வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
கிக்கு ஏறுதே
வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு
குழந்தை ஞானி இந்த இருவர் தவிர
இங்கே சுகமாய் இருப்பவர் யார் காட்டு
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமது மட்டும்
இது தான் ஞான சித்தர் பாட்டு
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமது மட்டும்
இது தான் ஞான சித்தர் பாட்டு
இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் மத சண்டை ஜாதி சண்டை வம்பெதுக்கு
கிக்கு ஏறுதே
வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
தாயை தேர்ந்தெடுக்கும்
தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்கை மட்டும்
உந்தன் கையில் உண்டு அதை வென்று எடு
கிக்கு ஏறுதே
வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
கொண்டு செல்ல



Writer(s): a. r. rahman, vairamuthu



Attention! N'hésitez pas à laisser des commentaires.