Mano, Sujatha - Thilana Thilana - From "Muthu" paroles de chanson

paroles de chanson Thilana Thilana - From "Muthu" - Mano, Sujatha




தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக்
கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா
(தில்லானா)
பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா
(தில்லானா)
திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...
சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே
(தில்லானா)





Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}