Ilaiyaraaja - Pachamala Poovu paroles de chanson

paroles de chanson Pachamala Poovu - S. P. Balasubrahmanyam



பச்சமல பூவு நீ
உச்சி மலத்தேனு
குத்தங்கொற ஏது நீ
நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு
தூரி தூரி ஹோய்
பச்சமல பூவு நீ
உச்சி மலத்தேனு
குத்தங்கொற ஏது நீ
நந்தவனத் தேரு
காத்தோடு மலராட
கார்குழலாட
காதோரம் லோலாக்கு
சங்கதி பாட
காத்தோடு மலராட
கார்குழலாட
காதோரம் லோலாக்கு
சங்கதி பாட
மஞ்சளோ தேகம்
கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க
கொண்டு வரும் ராகம்
நிலவ வான் நிலவ
நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே
பாட்டெடுத்து தாரேன் ஹோய்
பச்சமல பூவு நீ
உச்சி மலத்தேனு
குத்தங்கொற ஏது நீ
நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு
தூரி தூரி ஹோய்
பச்சமல பூவு நீ
உச்சி மலத்தேனு
குத்தங்கொற ஏது நீ
நந்தவனத் தேரு
பூநாத்து மொகம் பார்த்து
வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பார்த்து
வந்த வழி போக
பூநாத்து மொகம் பார்த்து
வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பார்த்து
வந்த வழி போக
சித்திரத்து சோலை
முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன்
துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில்
நூலெடுத்து வாரேன்
விண்ணுல மீன் புடிச்சு
சேல தெச்சுத் தாரேன் ஹோய்
பச்சமல பூவு நீ
உச்சி மலத்தேனு
குத்தங்கொற ஏது நீ
நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு
தூரி தூரி ஹோய்
பச்சமல பூவு நீ
உச்சி மலத்தேனு
குத்தங்கொற ஏது நீ
நந்தவனத் தேரு



Writer(s): Ilaiyaraaja, R.v. Udhayakumar


Ilaiyaraaja - Kizhakku Vaasal (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.