paroles de chanson Paadhi Nilaa Indru - S. P. Balasubrahmanyam , K. S. Chithra
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
கோகுல வாசமோ
ராதையின் ஸ்வா சமோ
துவாரகை வீதியில்
மலர்களும் பேசுமோ
மௌனமே மயங்குமோ
இது என்ன மாயமோ
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
மிதிலையில் நான் அன்று
வில்லை முறித்தது சீதை தோளில் சேரவே
மிதிலையில் நான் அன்று
வில்லை முறித்தது சீதை தோளில் சேரவே
தீயினில் மூழ்கி என்
தேகம் ஜொலித்தது ராமன் பெருமை கூறவே
அக்பரது ராஜ்யத்தில் நீ அனார்கலி
சந்தான தேர் நானா வந்த சலீம் நானடி
ஏதெனின் தோட்டத்தில் எவளும் நானாக
ஆதமின் நெஞ்சத்தில் ஆனந்த தேனாக
இரவும் பகலும்
இணைந்து கலந்த
ஞாபகம் இருக்குதா
இதயமும் சிவக்குதா
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
தங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய
ஷாஜஹானின் பைங்கிளி
தங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய
ஷாஜஹானின் பைங்கிளி
ஷேஸ்பியரே தீட்டிய ரோமியோ ஜூலியட்
சித்திரம் பேசும் தமிழ் மொழி
மன்னன் மகள் அமராவதி அம்பிகாபதி
நெஞ்சினிலே இன்று வரை ஏது நிம்மதி
லைலாவே நான் காதல் பைத்தியம் ஆனேனே
மஜ்னுவின் மனசுக்கு வைத்தியம் ஆவாயா
கனவில் மலர்ந்த
காதல் கதைகள்
ஆயிரம் உலகிலே
அனைத்தும் நம் கதைகளே
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
கோகுல வாசமோ
ராதையின் ஸ்வா சமோ
துவாரகை வீதியில்
மலர்களும் பேசுமோ
மௌனமே மயங்குமோ
இது என்ன மாயமோ
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு

Attention! N'hésitez pas à laisser des commentaires.