S. P. Balasubrahmanyam feat. Swarnalatha - Maaya Machindhra paroles de chanson

paroles de chanson Maaya Machindhra - S. P. Balasubrahmanyam , Swarnalatha



மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
மாறன் கலைக்கூடம்
மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி காதல் சாஸ்திரி
மார்பில் விளையாட
மன்னன் கை விசைப் போட
ராத்திரி அடச்சீ போக்கிரி
உருமாறி உருமாறி
ஓவியப்பெண் உனைத் தேடி
வருவேனே வாரித் தருவேனே
தடை தாண்டும் படை வீரா
உடையாக அணிவீரா தம்பூரா
மீட்டும் கிங்கரா
உனை நானும் அடையாது
விழி வாசல் அடையாது
கஞ்சிரா தட்டக் கொஞ்சிறா
மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
உன்னை நான் சந்தித்தால்
உள்ளத்தில் தித்தித்தய்
தகதிமித் தகதிமித் தாளம்
உன்னை நான் சிந்தித்தால்
உண்டாகும் தித்திப்பை
உதடுக்குள் பொத்தி வைத்தேன் நானும்
பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சர்க்கரை நாள் வந்தாலென்ன
தினமும் தினமும் வரலாமா
தவணை முறையில் தரலாமா
சொல்லடி சோன் பப்படி
செயலில் இறங்கு சீக்கிரமா
மீனம் மேஷம் பாக்கணுமா
மென்னுடா என்னைத் தின்னுடா
மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
செய்... செய்.செய்.
தரத் தரத் தரத் த்ரத்த தரத் த்ரத்த (இசை)
அன்பே என் பேரென்ன
நான் வாழும் ஊரென்ன
அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே
பெண்ணே என் பேச்செங்கே
நான் வாங்கும் மூச்செங்கே
புரியாமல் தவிக்கின்றேன் மானே
காதலுக்குக் கேள்விக் கேட்டு மாளாதைய்யா
காமனுக்கு தாமதங்கள் ஆகாதைய்யா
கனவில் பனியாய் கரைவோமா
கரைந்தே கவிதை வரைவோமா
சுட்டியே கண்ணுக் குட்டியே
உனையும் எனையும் பிணைவோமா உலகப்
படமாய் தருவோமா அஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா
மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா
ஹூஹை ஹூஹை ஹூஹை ஹூஹை...
ஹூஹை ஹூஹை ஹூஹை ஹூஹை
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா




S. P. Balasubrahmanyam feat. Swarnalatha - Indian
Album Indian
date de sortie
23-08-1996




Attention! N'hésitez pas à laisser des commentaires.