Sadhana Sargam feat. Hariharan - Mottu Onru (From "Kushi") paroles de chanson

paroles de chanson Mottu Onru (From "Kushi") - Hariharan , Sadhana Sargam



யார் சொல்வதோ யார் சொல்வதோ
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உளியின் வெற்றியா
யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ
மேகம் என்பது அட மழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
காதல் என்பது இரு மன முடிச்சு
கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
மேகங்கள் முட்டிக்கொள்வதாலே
சண்டை என்று பொருள் இல்லை
தேகங்கள் முட்டிக்கொள்வதாலே
ஊடல் என்று பொருள் இல்லை
இதழ்கள் பொய் சொல்லும்
இதயம் மெய் சொல்லும்
தெரியாதா உன்மை தெரியாதா
காதல் விதை போல மௌனம் மண் போல
முலைகாதா மன்னை துளைகாதா
யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ
பனிகுடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
உயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும்
ஹோ மௌன குடங்கள்
மெல்ல உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்
உள்ளத்தை மூடி மூடி தைத்தால்
கலை இல்லை காதல் இல்லை
உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்
பயம் இல்லை பாரம் இல்லை
நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா
கமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா கதிர் திறக்காதா
யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உளியின் வெற்றியா
யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ




Attention! N'hésitez pas à laisser des commentaires.