Yuvan Shankar Raja, Karthik & Sunitha Sarathy - Suthudhe Suthudhe (From "Paiya") paroles de chanson

paroles de chanson Suthudhe Suthudhe (From "Paiya") - Yuvan Shankar Raja, Karthik & Sunitha Sarathy



சுத்துதே சுத்துதே பூமி...
இது போதுமடா போதுமடா சாமி...
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சிரித்து சிரித்துத்தான் பேசும் போது
நீ வலைகளை விரிக்கிறாய்
சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே
வெட்டவெளி நடுவே
அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
இதயம் உருகித்தான் கரைந்து போவதை
பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா
கேட்கிறேன் உனை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா
ஹேய் சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகியராதே
உன் அழகை விண்ணில் இருந்து
எட்டி எட்டி பார்த்து நிலவு ரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்



Writer(s): RAAJA YUVAN SHANKAR, N MUTHU KUMAR


Yuvan Shankar Raja, Karthik & Sunitha Sarathy - MasterWorks - Karthik
Album MasterWorks - Karthik
date de sortie
29-07-2016



Attention! N'hésitez pas à laisser des commentaires.