Yuvan Shankar Raja feat. Hariharan - Venmegam (From "Yaaradi Nee Mohini") paroles de chanson

paroles de chanson Venmegam (From "Yaaradi Nee Mohini") - Yuvan Shankar Raja feat. Hariharan




வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?
மஞ்சல் வெயில் நீ! மின்னல் ஒளி நீ!
உன்னைக் கண்டவரைக் கண்கலங்க நிற்கவைக்கும் தீ!
பெண்ணே என்னடீ! உண்மை சொல்லடீ!
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடீ!
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்!
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்!
ஒன்றா? இரண்டா? புன்னகையைப் பாட!
கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்!
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்!
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!
எங்கள் மனதைக் கொள்ளையடித்தாய்!
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்?
விழியசைவில் வலை விரித்தாய்!
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச் செல்ல
கட்டளைகள் விதித்தாய்!
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி!
என் காதலும் என்னாகுமோ!
உன் பாதத்தில் மண்ணாகுமோ!
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?



Writer(s): RAAJA YUVAN SHANKAR, N MUTHU KUMAR


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}