Hariharan feat. Harini - Konjum Manjal текст песни

Текст песни Konjum Manjal - Hariharan , Harini



கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
தீ மூட்டியதே குளிர்க் காற்று
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு
வியர்வையிலே தினம்
பாற்கடல் ஓடிடும் நாளும்
படகுகளா இது? பூவுடல்
ஆடிட இவள் மேனியை
என் இதழ் அளந்திடும் பொழுது
ஆனந்த தவம் இது
உன் விரல் ஸ்பரிசத்தில்
மின்னலும் எழுமே
அடடா என்ன சுகமே
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அன்பே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
உன் மேனியில் ஆயிரம் பூக்கள்
நான் வாசனை பார்த்திட வந்தேன்
புல் நுனியினில் பனித் துளி போலே
உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன்
மயங்குகிறேன் அதில்
உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ?
வழங்குகிறேன் இவள்
உதடுகள் காய்ந்தது இவள் சேலையில்
பூக்களும் கட்டிலின் கீழே தூங்கிடலானது
உன் வளையோசையில் நடந்தது இரவே
நினைத்தால் என்ன சுகமே
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அன்பே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்



Авторы: Pazhani Bharathi, Karthik Raja


Hariharan feat. Harini - Ullasam (Original Motion Picture Soundtrack)
Альбом Ullasam (Original Motion Picture Soundtrack)
дата релиза
27-02-2015



Внимание! Не стесняйтесь оставлять отзывы.