Deva feat. Hariharan & K. S. Chithra - Kalayil Pookum текст песни

Текст песни Kalayil Pookum - Hariharan , K. S. Chithra , devA



காலையில் பூக்கும் கல்லூரிப் பூவே
எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே
பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்
முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்
கனவுக்கு பரிசளிப்போம்
வானம் சென்று நீலம் கொள்வோம்
காதல் கொண்டு காலம் வெல்வோம்
நிழலுக்கு உயிர் தருவோம்
காதலே நிம்மதி காதலே நிம்மதி
காதலே நிம்மதி காதலே நிம்மதி
காதலுக்கும் கற்பு உண்டு சொல் சொல்
கற்பு மட்டும் காதல் இல்லை சொல் சொல்
ஞானி தன்னை காதல் வெல்லும் சொல் சொல்
காதலுக்கும் ஞானம் உண்டு சொல் சொல்
நூற்றாண்டே நூற்றாண்டே
நொடியினில் கடந்தவர் யாரோ
காற்றே சொல் காற்றே சொல்
காதலில் வென்றவர் தானோ
பௌர்ணமி மடி தர வியர்வைகள் உடைதர
மன்மதம் மலர்கிறதே...
(காதலே நிம்மதி)
காதலுக்கு நேர்மை உண்டு சொல் சொல்
நேர்மையிலும் தூய்மை உண்டு சொல் சொல்
காதலுக்கு ஆண்மை உண்டு சொல் சொல்
ஆண்மைக்குள்ளும் தாய்மை உண்டு சொல் சொல்
கண்ணாலே கண்ணாலே காதலை வணங்கிட தானே
வந்தோமே வந்தோமே காதலின் பிள்ளைகள் நாமே
கவிதைகள் வழி விட கனவுகள் விடை பெற
திடும் என விடிகிறதே...
(காதலே நிம்மதி)



Авторы: Arivumathi, Deva


Deva feat. Hariharan & K. S. Chithra - Kaadhale Nimmadhi (Original Motion Picture Soundtrack)
Альбом Kaadhale Nimmadhi (Original Motion Picture Soundtrack)
дата релиза
14-01-1998



Внимание! Не стесняйтесь оставлять отзывы.