Hariharan feat. Mahalakshmi - Kurukku Siruthvalea ( From "Mudhalvan") текст песни

Текст песни Kurukku Siruthvalea ( From "Mudhalvan") - Hariharan feat. Mahalakshmi




குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இல
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே
கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே
ஒரு மொழி சிரிச்சு பேசடியே
வாயி மேல வாய வெச்சு
வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல
அடி ஒம்போல செவப்பு இல்ல
கணுக்கால் கூட கருப்பு இல்ல
நீ தீண்டும் இடம் தித்திக்குமே
இனி பாக்கி ஒடம்பும்
செய்ய வேண்டும் பாக்கியமே
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
ஒரு தடவ இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
ஒம்முதுக தொலச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில்
உடன் வரக் கூடுமோ
உசிர் என்னோட இருக்கயிலே
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இல
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
குறுக்கு சிருத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் உன்னக் கொஞ்சம் பூசுவேன்யா
உன் கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம் மாத்துவேன்யா



Авторы: vairamuthu


Hariharan feat. Mahalakshmi - A.R.Rahman's - Music Forever
Альбом A.R.Rahman's - Music Forever
дата релиза
18-07-2013




Внимание! Не стесняйтесь оставлять отзывы.