Текст песни Thodu Vaanam (From "Anegan") - Hariharan , Harris Jayaraj , Shakthi Sree Gopalan
தொடு வானம்
தொழுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய்
பக்கமாகிறாய்
தொடும் போதிலே
தொலைவாகிறாய்
தொடு வானம்
தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளி போல்
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீளத்தில் எனை புதைகிறேன்
வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீளத்தில் எ னை புதைகிறேன்
இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ
இலை மேலே பனி துளி போல்
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
காதல் என்னை பிழிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினை தேடும் வேரினை போல
பெண்ணை உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டும் மூடும் போது
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூன்யம் ஆகுதே
சிறுபொழுது பிரிந்ததற்கே
பெரும் பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ
Внимание! Не стесняйтесь оставлять отзывы.