Harris Jayaraj,Karthik - Kani Mozhiyae (From "Irandaam Ulagam") текст песни

Текст песни Kani Mozhiyae (From "Irandaam Ulagam") - Karthik , Harris Jayaraj

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை தின்று போகிறாய்
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து எனை வாழச் சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஒருபாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறுபாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்
நான் எட்டுத்திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா?
அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா?
நான் எட்டுத்திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா?
அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா?
உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்
அடி உந்தன் கன்னக்குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்டபின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே (கள்ளப் பார்வை பார் அழகே)
சிறு காதல் பேசு ஊமை கிளியே (காதல் பேசு ஊமை கிளியே)
நான் தேடித் திரியும் வாழ்வே நீதானே தென்றலே வா முன்னே
முத்தமா கேட்கிறேன்?, முருவல்தான் கேட்கிறேன்
கனிமொழியே, ம்ம்ம்ம்ம்
கடைவிழியால், ம்ம்ம்ம்ம்
பறவை பறக்கும்போது ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவைமீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும்போது உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன்மீதே விழுந்திருக்கும்
எனை கட்டிப்போடும் காந்தச் சிமிழே
ஒரு பாட்டுப் பாடு காட்டுக்குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானே வாழலாம் வா பெண்ணே
வலது கால் எத்து வை, வாழ்க்கையை தொட்டு வை
கனிமொழியே (கனிமொழியே) என்னை கொன்று போகிறாய்
கடைவிழியால் (கடைவிழியால்) என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து எனை வாழச் சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஒருபாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறுபாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்
நான் எட்டுத்திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா?
அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா?
நான் எட்டுத்திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா?
அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா?

Авторы: VAIRAMUTHU R, JAYARAJ J HARRISH

Внимание! Не стесняйтесь оставлять отзывы.